Tuesday, September 21, 2004

இந்தியா - பாக் மாட்ச்

இந்தியா-பாக் மாட்ச் பாத்து மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.நம்ம டீம் பேட்டிங் வழக்கம் போல சீட்டுக்கட்டு கோட்டை மாதிரி சரிஞ்சு விழுந்துது.
ஆனா சந்தோஷப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னனா,நம்ம இர்ஃபான் பௌலிங்.200 ரன் எடுத்துட்டு,ஜெயிச்சு குடுடான்னா எப்டி முடியும்?இப்போ தான் முதல் தடவையா இர்ஃபான் பௌலிங் பாத்தேன்.கலக்கறான் பையன்.ஒவ்வொரு இன் ஸ்விங்கும் ஒரு கவிதை.பையன் கொஞ்சம் யார்க்கரும் போட்டான்னா,அவன அடிச்சுக்க ஆள் இல்லை.இன்ஷா அல்லாஹ்,இந்த பையன் காயம் எதுவும் இல்லாம,அக்ரம் மாதிரி ரொம்ப நாள் டீம்ல ஆடணும்.இந்த மாட்ச்ல இர்ஃபானுக்கு மட்டும் ஒரு நல்ல ஜோடி இருந்திருந்தா ஜெயிச்சிருக்கலாம்.ஆஷீஷ் நெஹ்ரா சுத்த வேஸ்ட்.ஜஹீர் கான் ,அப்டி இல்லனா நம்ம ஊரு பாலாஜி, இர்ஃபான் கூட ஆடியிருந்தா நல்லா இருந்திருக்கும்.ஜஹீரோட யார்க்கர ரொம்ப மிஸ் பண்ணினேன்.ஹூம்,கைய விட்டு போச்சு.

இது எல்லாம் விட கொடுமை என்னனா,மாட்சுக்கு அப்புறம் ந்டந்த கங்கூலியோட ப்ரஸ் மீட்."டீம்ல சில பேர் ரொம்ப நாளா சரியா ஆடாம இருக்காங்க.அவங்க சீக்கிரம் ஒழூங்கா ஆடலைனா,மவனே தூக்கி வெளில போட்டுடுவேன்னு சொல்றான்.அப்டி சொல்லும் போது கொஞ்சம் தன்னோட ஃபார்ம் பத்தியும் மனசு தொட்டு யோசிச்சு இருக்கணும்.கென்யா,பங்களாதேஷ் கூட சதம் போடறது புறநானூறுல சொல்ற மாதிரி முயல் வேட்டைல ஜெயிக்கற கதை தான்.சனிக்கிழமை மாட்ச்ல கங்கூலி, சாமி பௌலிங்ல சாமியாடினதப் பாத்தா கேவலமா இருந்தது.முதல் பந்துலயே அண்ணாத்தே ஆட்டம் காலின்னு தெரிஞ்சு போச்சு.அதே மாதிரி, பதான் பௌலிங்ல பாக் பேட்ஸ்மேன் எல்லாரும் நல்லா தடவினாங்க.ஆனா காட்டான் அஃப்ரிதி ஒரே ஒரு ஓவர்ல டோட்டல் மாட்ச்சயே திருப்பிட்டான்.

சேவாக் ஒரு 6 மாசம் ரஞ்சி மாட்ச் ஆடி பழைய ஃபார்முக்கு வரணும்.சும்மா நம்ம அஜித்குமார் மாதிரி "நான் அப்டி தான் "னு டயலாக் விட்டுட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.நம்ம செலெக்ஷன் கமிட்டி இன்னும் கொஞ்சம் பாரபட்சம் இல்லாம தேர்வு செய்யணும்.
என்னமோ போ,வழ்க்கம் போல இந்த கப்பும் ஆஸ்திரேலியாக்கு தான் போகப் போறது.

இந்தியன் டீம் தலைவிதி இன்னும் சச்சின் கைலதான் இருக்கு போல.

1 comment:

Anonymous said...

Dear Sriram san,
Greetings,
Hope this mail finds you in a great spirit and good health. I am doing well. Hope things are going well for you.

I am admired your posting ma.Keep posting.Its intresting and lot of timily sence.
Keep posting and keep in touch.Take Good care.
Best Regards,
-::Who am I?::-