Thursday, June 19, 2008

கல்லூரி காதல் AND MORE!

"என்னடா மச்சி! பத்து நாளா காலேஜ் பக்கம் ஆளையே காணோம்? செமஸ்டர் எக்ஸாம் வேற வருது.எங்கே போனே ?"

"இல்லடா , நான் உங்கிட்டே சொன்னேன் இல்ல , அந்த ஃபர்ஸ்ட் இயர் படிக்கற பக்கத்து வீட்டு பொண்ணு ? போன வாரம் நானும் அவளும் வீட்ட விட்டு ஓடிட்டோம் மச்சி!"

"டேய் ! என்னடா சொல்றே ? ஆர் யு கிட்டிங்?"

"இல்லடா , ஐ அம் சீரியஸ்"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"வீட்ல அக்கா கல்யாணத்துக்கு ஒரு 20000 வெச்சிருந்தாங்க.அத எடுத்திட்டு அப்படியே கெளம்பிட்டோம்.சென்னைலேந்து நேரே மதுரைக்கு போனோம்.அங்க ஒரு 3-ஸ்டார்ல ஸ்டே பண்ணினோம். ஒரே ரூம்ல தான் தங்கினோம்.அப்போவே அவளை ட்ரை பண்ணினேன் மச்சி.வொர்க் அவுட் ஆகல.தாலி கட்டினா தான் ஆச்சு அப்டினுட்டா.ஸோ, லைட்டா .... "

"அடப்பாவி ! அப்புறம்? "

"மறுநாள் திருச்செந்தூர் கோயில் போனோம்.போற வழியில சிம்பிளா ஒரு பவுன் தாலி வாங்கினேன். கோயில் பிரகாரத்துல வெச்சு தாலி கட்டினேன்.அங்கியே ஒரு லாட்ஜ் எடுத்து அவளை போட்டேன் மச்சி! "

"மை காட்!"

"அப்புறம் ராமேஸ்வரம் போனோம்.அங்கியும் ஒரு சீப் ஹோட்டல்ல தங்கி அவளை ரெண்டு மூணு தரம் செஞ்சேன்டா.! "

"..த்தா...செமையா என்ஜாய் பண்ணி இருக்கே போல !! "

"ஆமாடா ..ஆனா அந்த பொண்ணு அங்கேந்து ஃபிரெண்டுக்கு ஃபோன் பண்ணி இருப்பா போல .என்னோட அப்பா அம்மா , அவளோட அப்பா அம்மா எல்லாரும் ஸ்ட்ரெய்ட்டா ராமேஸ்வரம் வந்துட்டாங்க !"

"மாட்டிகிட்டியா ?? "

"அவங்க அப்பா அம்மா செமையா டென்ஷன் ஆனாங்க .என்னோட அப்பா அம்மாவும் என்ன திட்டினாங்க.நான் லைட்டா சொல்லி பாத்தேன்.தாலி எல்லாம் கட்டிட்டேன் அப்படின்னு.அந்த பொண்ணும்,அவ அப்பா அம்மாவும் கூட சொல்லி பாத்தாங்க கல்யாணம் பண்ணி வெச்சிருவோம், அப்படின்னு.எனக்கு பேஜார் ஆகி போச்சு என்னடா இது கல்யாணம் அது இதுங்கறான்களேன்னு.நல்ல வேளை,எங்க அப்பாம்மா முடியாதுன்னு சொல்லிட்டாங்க. "

"டேய்! அப்போ நீ கட்டின தாலி??"

"என்னடா நீ ?? புரியாம பேசறே ?? அதெல்லாம் ஒரு இதுக்கு டா !!"

"அப்போ அந்த பொண்ணு ??"

"நான் என்ன பண்றது மச்சி??"

மேல இருக்கறது ஏதோ சரோஜாதேவி புக்லேந்து எடுத்த மலிவான சமாச்சாரமோ,ஒரு தமிழ் படத்தோட உல்டாவோ இல்லை.நான் காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கும்போது நடந்த ரியல் இன்சிடென்ட். அந்த கலாப காதலன் தன்னோட சாகசங்களை இன்னொருத்தன் கிட்டே சொல்லும்போது என் காதால் கேட்டது.


அப்போ எனக்கு கொஞ்சம் (நெறையாவே) பொறாமையா இருந்தது.இருந்தாலும் அடி மனசுல ஏதோ தப்புன்னு புரிஞ்சுது.இப்போ இதை எழுதும்போது அருவெருப்பும் , எங்க தப்பு நடக்கிறதுங்கிற பயம் கலந்த கேள்வியே வந்துது.

I wrote this in the wake of seeing a report about India being among the top in the crimes.I am worried whether it is an irrepairable damage that has happened to we the indians?The above incident is not an one-off thing that one can forgive.Whereever you turn , there is a crime in all possible forms.

The sexual crimes committed against women is the most shameful act that every indian should be ashamed to their life .Every country warns their tourists who are visiting India severely about this.Rather than getting angry about it , everyone should do a soul search for themselves.

God save us!


6 comments:

Anonymous said...

Very true, India is one of the countries that has lost all the values. Mathippeedugale illaathaa oru samoogam. It is a leader in the crimes against women, children and the downtrodden people.

Anonymous said...

True. Whenever there is so much emphasis on "Othering" a set of people, the 'other' group tends to be exploited. With very skewed notions of karpu and 'penn endral dheivam' and hence she will put with as much crap as she is dealt with, the 'as human as you' aspect is forgotten.

Anonymous said...

your observations are so true! Every day, our value system is going down the drain! we do not feel guilty of many things we do. slowly, we are getting numb to all the attrocities going around us! Every day i am scared that i will become like everyone else not realizing that i am becoming one of the others!

Thanks to Charuonline for the link to this post!

ravikumar.chandran@gmail.com

Anonymous said...

hey you are being quoted for this story on one of the most interesting and important sites in tamil..

http://www.charuonline.com/june08/kkathai.html

Bala

Anonymous said...

Naanae intha maathiri pesirukaen aanaa senjathilla. ithu evvalavu kevalamaana vishamnu ippo thaan puriytuhu. chance kedaikra varaikkum thaan nallavan. sex controlled soceity'la vera enna ethir paarkka mudiyum.

sriram said...

Thank you all for your comments.Its overwhelming and encouraging.