யப்பா ,இந்த ஜப்பானீஸ் செம பேஜார் பண்றது மச்சி! அதான் அப்டியே கொஞ்ச நேரம் ப்ளாகு பக்கம் வந்து எதாவது கிறுக்கலாம்னு வந்தேன்.நானும் கொஞ்ச நாளா தமிழ்ல மேட்டரு போடணும்னு யோசிட்டே இருந்தேனா ,அப்போ தான் இந்த தமிழ் யுனிகோட் சாஃப்ட்வேர பாத்தேன்.ரொம்ப புடிச்சு போச்சு பா.ஆனா என்ன ,இந்த தங்கிலீஷ்ல டைப் பண்றது தான் கொஞ்சம் பேஜார்.போக போக பழகிடும்னு நெனைக்கறேன்.
சரி,இப்போ மேட்டருக்கு வருவோம்.இப்போ தமிழ்நாட்ல நியுமராலஜி,நேமாலஜி அப்டி ,இப்டினு நெறய பேரு டி.வில வந்து டார்ச்சர் பண்றாங்க போல.ஒரு நாளு நைட்டு,மெகா சீரியல் எல்லாம் பாத்து அழுது முடிஞ்சதுக்கு அப்புறம்,அப்பா எதோ சேனல் மாத்தின போது,யாரோ ஒரு ப்ரகஸ்பதி,நியுமராலஜி பாக்கறேன் பேர்வழினு அள்ளி விட்டுட்டு இருந்தார்.ஒரு பெரிய கல்யாண மண்டபம் ஃபுல்லா கூட்டம்.இந்த கூத்த காம்பியர் பண்ண கடந்த கால கனவுக்கன்னி ஐஸ்வர்யா வந்திருந்தாங்க.சும்மா சொல்லகூடாதுபா,ஐஸ்வர்யா இப்போ கூட சூபரு!!(hihihi..)
குறி சொல்றவர் (அதாம்பா,numerologist)கோட்டு,சூட்டு எல்லாம் போட்டு சும்மா புது மாப்ள கணக்கா இருந்தாரு.கூட்டத்ல நெறயா பெருசுங்க எல்லாம் இருந்தாங்கோ.என்னனெமோ கேள்வி எல்லாம் கேட்டாங்கபா.ஆனா நம்ம சூட்டு மாப்ள எதுக்கும் அசராம,யாரு என்ன கேட்டாலும்,மவனே கம்பராமாயணம்,கைலாசமலை அப்டினு தான் ஸ்டார்ட் பண்ணார்.ஆனா கடைசி வரைக்கும் கேட்ட கேள்விக்கு பதிலே வர்ல.இந்த ஆளு வுட்ட பீலாவுல கேட்டவன் கேள்வியையே மறந்திருப்பான் போல.
ஆனா ஒண்ணு,(ஆவன்னா தான் ரெண்டு சொன்னா நான் டென்சன் ஆயிடுவேன்,என்ன??),அந்த ஆளு வுட்ட பீலாவுல,நார்மலா இருக்குற என் நைனா கூட,"ஆகா,என்னா அறிவு இந்த புள்ளைக்கு" அப்டினு சொல்லிபோட்டார்பா.(யு டூ ,டாட்??).
சரி மவனே,நீ அள்ளி விடு அப்டினு நெனச்சிட்டு இருக்கும்போது,ஒரு பெரிசு எழுந்து,"இந்த கம்ப்யூட்டர்ல வைரஸ் வரதே ..அதுக்கு எதாவது மந்திரம்,தாய்த்து இருக்கா உங்க சுருக்கு பைல??" அப்டினு ஒரு போடு போட்டுதே பாக்கணும்.நமக்கு உடனே,ஆகா,நம்ம மேட்டர் ஆச்சே ,எப்டி பீலா விட்ரார்னு பாக்கலாம்னு ஆர்வமா உக்காந்தேன்.ங்கொக்காமக்கா,அந்த ஆளு சொன்ன பதில்ல ஆடிப்போயிட்டேன்.கம்ப்யூட்டர் எல்லாம் எதோ அனுராதா மண்டலத்துல இருக்கற சாமி தான் கன்ட்ரோல் பண்றதாம்.அதுனால ,டெய்லி காலைல கம்ப்யூட்டர் ஆன் பண்ணும்போது,இந்த மந்திரம் சொல்லிட்டு ஆன் பண்ணுனீங்கன்னா கம்ப்யூட்டருக்கு நோய்நொடி எதுவும் அண்டாதுனு சொல்லி ஒரு மந்திரத்த போர்ட்ல எழுதினார் பாக்கணுமே.யப்பா,சரியான தில்லாலங்கிடி வேலைபா சாமி!!!
இவ்ளோ சிம்பிள் மேட்டருக்கு போயி,நார்டன் ஆன்டி வைரஸ்,மக்குகாப்பி(பேரு நல்லா இருக்கு,இல்ல??),சுக்குகாப்பினு ஆயிரம் கம்பெனி.பல பில்லியன் டாலர் செலவு.!! எல்லா கம்பெனியையும் இழுத்து மூடிட்டு ,எல்லாரும் நம்ம கோட்டு அண்ணாத்தே சொல்றத கேட்டு நடந்துகோங்கபா!!!!
வால்க நியுமராலஜி,வால்க அனுராதா மண்டலம்.!!
3 comments:
Machi I feel ashamed having worked for a company like McAfee. That’s a far-fetched reply by the guy. By the way u should have shared the mantram also with us.
-Vaidhyanathan.B
Dhool kelapitta po ... Naan sirichu sirichu ippo vaiyiru vallikudhu ...
Very Hilarious.
Post a Comment